சென்னைக்குள் ராட்சத ஆப்பிரிக்க நத்தை: மூளை வீக்க அபாயம்

0பார்த்தது
சென்னைக்குள் ராட்சத ஆப்பிரிக்க நத்தை: மூளை வீக்க அபாயம்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆப்பிரிக்க நத்தைகள் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நத்தைகள் மனிதர்களுக்கு மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளைக் கொண்டுள்ளன. செயிண்ட் தாமஸ் மவுண்ட், திருசூலம், பெருங்களத்தூர் பகுதிகளில் இவை கண்டறியப்பட்டன. வெள்ளப்பெருக்கு காலங்களில் இவை வேகமாகப் பரவி மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இவற்றை மக்கள் தொடக்கூடாது என்றும் இதன் மூலம் வயிறு, மூளை தொடர்பான தொற்று ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி