ரூ.250 கோடிக்கு ஏலத்திற்கு வரும் பிரம்மாண்ட டைனோசர் எலும்புக்கூடு

6பார்த்தது
ரூ.250 கோடிக்கு ஏலத்திற்கு வரும் பிரம்மாண்ட டைனோசர் எலும்புக்கூடு
உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு ஒன்று, வரும் ஜூலை 14-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ.250 கோடிக்கு ஏலம் விடப்பட உள்ளது. சுமார் 38 அடி நீளமும் 12.5 அடி உயரமும் கொண்ட இந்த அரிய எலும்புக்கூடு, கடந்த 2021-ம் ஆண்டு சவுத் டகோட்டாவில் கேரி என்பவரின் நிலத்தில் கண்டறியப்பட்டது. தற்போது கேரி மறைந்துவிட்ட நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க ஏலத்தின் மூலம் கிடைக்கும் முழு தொகையும் அவரது குடும்பத்தினருக்குச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி