கில் டி20 கிரிக்கெட்டில் 6000 ரன்கள் கடந்து சாதனை

6280பார்த்தது
கில் டி20 கிரிக்கெட்டில் 6000 ரன்கள் கடந்து சாதனை
18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த போது, 7-வது ஓவரின் முதல் பந்தில் நூர் அகமதுவின் பந்துவீச்சை எதிர்கொண்ட கில், ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்து டி20 கிரிக்கெட்டில் தனது 6000 ரன்களை கடந்தார். இந்த சிக்ஸர் மூலம், டி20 கிரிக்கெட்டில் தனது 200-வது சிக்ஸரையும் அவர் பூர்த்தி செய்தார். இந்த சாதனையின் மூலம், டி20 கிரிக்கெட்டில் மிக வேகமாக 6,000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் கே.எல் ராகுல் 166 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 184 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், கில் 185 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களை கடந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி