உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவியை கரும்புத் தோட்டத்தில் வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜலால்பூர் பகுதியில் பள்ளி சீருடை அணிந்த நிலையில் கரும்புத் தோட்டத்தில் 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் ஆடைகள் கிழிந்து, அவரது பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிவதைப் பார்த்த போலீசார், பாலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.