ஹரியானா மாநிலம் குருகிராமில் 15 வயது சிறுமி ஒருவரை, இளைஞர் ஒருவர் 7 மாதங்களாக பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி இந்த கொடுமையைச் செய்துள்ளார். இதன் விளைவாக, அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.