100 தோப்புக்கரணம் போட்ட சிறுமி திடீரென உயிரிழப்பு

31பார்த்தது
100 தோப்புக்கரணம் போட்ட  சிறுமி திடீரென உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் பள்ளிக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த 13 வயது மாணவியை, புத்தகப் பையுடன் வகுப்பு ஆசிரியர் 100 தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இதனால் கடும் முதுகு வலி ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.