மும்பை மும்ப்ரா பகுதியில் காணாமல் போன அர்பாஸ் என்ற வாலிபர், பணத்திற்காகக் கொடூரக் கொலை செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அர்பாஸை வெர்சோவா பகுதிக்கு வரவழைத்த அவரது காதலி மெஹ்ஜபீன் ஷேக், தனது கணவன் ஹசன் மற்றும் சகோதரன் தாரிக் ஆகியோருடன் இணைந்து அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை ஒரு ட்ரம்மில் அடைத்து சாக்கடையில் வீசியுள்ளனர். போலீசார் மெஹ்ஜபீன் மற்றும் அவரது சகோதரரைக் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கணவர் உட்பட இருவரைத் தேடி வருகின்றனர்.