சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் தார் ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகளும் 2 வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே கைதான ஞானசேகரன், பள்ளிக்கரணையில் 7 வீடுகளில் கொள்ளையடித்ததாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு பயன்படுத்திய ஜீப் வாகனத்தை தற்போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.