கடந்த ஜனவரியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான தங்க ஆபரணங்கள், ரத்தினங்கள் ஏற்றுமதி மதிப்பு ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் கோடி ஆக இருந்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்த ஏற்றுமதி மதிப்பை காட்டிலும் 5.79 சதவீதம் குறைவாகும். 2025ஆம் ஆண்டு ஜனவரியில் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மதிப்பு ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் கோடி ஆக இருந்தது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மதிப்பு 45 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்ததே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.