சென்னையில் இன்று (ஜன., 16) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.306-க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.3,06,000-க்கும் விற்பனையாகிறது. எனினும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பதற்றம், நிலையில்லாத சூழலால் முதலீடு செய்வதில் ஏற்ற இறக்கம் உள்ளது. திங்கள்கிழமை வரை பொறுத்திருந்து பின் தங்கம், வெள்ளி வாங்குவதை பற்றி யோசிக்கலாம்.