சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (நவ., 08) ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.90,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.11,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (நவ., 09) ஞாயிற்றுக்கிழமை என்பதால் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது. அதே போல், வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.