தங்கம் விலை நேற்று முன்தினம் (டிச., 12) ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,370, ஒரு சவரன் ரூ.98,960 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்றும் இன்றும் (டிச., 13, 14) அதே விலையில் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று ரூ.6 குறைந்த நிலையில், இன்று மாற்றமின்றி ஒரு கிராமுக்கு ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.