தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்., 15) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றமின்றி தொடர்கிறது. நேற்று (பிப்., 14) ஒரு கிராம் ரூ.14,560-க்கும், ஒரு சவரன் ரூ.116,480-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து நாளை (பிப்., 16) விலை உயரவோ, குறையவோ வாய்ப்புள்ளது.