தங்கம், வெள்ளி விலை இன்று மாற்றமில்லை

தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்., 22) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றமின்றி தொடர்கிறது. நேற்று ஒரு சவரன் ரூ.117,440-க்கும், ஒரு கிராம் ரூ.14,680-க்கும் விற்பனையான நிலையில், இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனையாகிறது. உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இது தங்கம், வெள்ளி விலையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
