சென்னையில் ஓடும் பேருந்தில் முதியவரின் கவனத்தை திசைதிருப்பி, கும்பலாக வந்த பெண்கள் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை திருடியதாக புகார் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக முதியவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பேருந்தில் ஒரு பெண் எனது அருகே அமர்ந்திருந்தார். சுமார் 10 நிமிடங்களில் இவ்வளவும் நடந்துவிட்டது” என வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.