சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.17) ரூ.80 குறைந்துள்ளது. நேற்று (நவ.16) ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,550க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.10 குறைந்து, ரூ.11,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.173க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.