சென்னையில் தங்கம் விலை நேற்று (நவ., 06) காலை ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்திருந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.560 உயர்ந்து ஒரே நாளில் ரூ.1,120 ஆக உயர்ந்தது. இந்நிலையில், இன்று (நவ., 07) ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,270-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.