தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாகக் குறைந்த நிலையில், தற்போது ரூ.800 உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில், இன்று காலையில் மேலும் ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,06,560-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,320-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.