தமிழகத்தில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. நேற்று (மே.26) நேற்று ஒரு சவரன் ரூ.1,17,840-க்கும், ஒரு கிராம் ரூ.14,730-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 குறைந்து ரூ.14,650 க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5000 குறைந்து ரூ.2,90,000க்கும் விற்கப்படுகிறது.