தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்., 13) மேலும் சற்று குறைந்துள்ளது. நேற்று (பிப்., 12) ஒரு கிராம் ரூ.14,600-க்கும், ஒரு சவரன் ரூ.116,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,400-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.115,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டு வருகிறது.