தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.11) ரூ.400 குறைந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,13,200க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,800க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,150க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.