தங்கம் விலை சில நாட்களாக கடுமையான ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.116,480க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சவரன் ரூ.115,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 7 நாட்களில் ரூ.1,120 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்து வருவதால், இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு தங்கம் விலை குறையும் என கூறப்படுகிறது.