உலக சந்தை மாற்றங்களால் தங்கம், வெள்ளி விலையில் கடும் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.3,760 குறைந்த நிலையில், வெள்ளி கிலோவுக்கு ரூ.35,000 வரை குறைந்துள்ளது. மேலும் இந்த விலை குறைவானது தொடர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறிவருகின்றனர். தங்கம் வாங்கும் பொதுமக்கள் பொறுமையாக இருந்து சிந்தித்து நகையை வாங்க வேண்டும்.