கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12-ம் தேதி ரூ.1,14,640 ஆக இருந்த சவரன் விலை, வெறும் 7 நாட்களில் ரூ.4,320 வரை அதிரடியாக அதிகரித்துள்ளது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் அதிரடி விலை உயர்வு, நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.