தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன் தினம் (மே.26) சென்னையில் ஒரு சவரன் ரூ.1,17,840-க்கு விற்பனை ஆன நிலையில் நேற்று (மே.27) சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று (மே.28) பெரிய அளவில் சரிந்து இருப்பதால் இன்றும் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.