தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வாரத்தில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், வரவிருக்கும் அமெரிக்க GDP தரவு மற்றும் தனிப்பட்ட நுகர்வு செலவினம் (PCE) பணவீக்க தரவு மற்றும் பெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் கருத்துகளில் கவனம் செலுத்தப்படும் என்பதால் ஏற்ற இறக்கம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.