தமிழ்நாட்டில் ஆபரணத்தங்கத்தின் விலை வார இறுதி நாளான இன்று (பிப்., 28) ஒரே நாளில் ரூ.5,200 உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது ஒரு சவரன் ரூ.1,24,400-க்கும், ஒரு கிராம் ரூ.15,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.320-க்கும், ஒரு கிலோ ரூ.3.20 லட்சத்துக்கும் விற்கப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சர்வதேச அளவில் பொருளாதார நிலையின்மை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் திங்களன்று பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது.