தமிழகத்தில் இன்று (மே.30) தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. நேற்று (மே.29) ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.1,17,040க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,600க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.14,630 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000க்கும் விற்பனையாகிறது.