மத்திய கிழக்கு போர் நிறுத்தம் காரணமாக, சர்வதேச அளவில் தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை 1 அவுன்ஸ் (28 கிராம்) 45.63 அமெரிக்க டாலர்கள் உயர்ந்து $4,831-க்கும், வெள்ளி விலை 1 அவுன்ஸ்-க்கு 2.24 டாலர்கள் உயர்ந்து 80.83 டாலர்களுக்கும் விற்பனையாகிறது. தமிழகத்தில் தங்கம் விலை நேற்று ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.