தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்., 21) கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நேற்று (பிப்., 20) ஒரு சவரன் ரூ.115,360-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.2,080 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.117,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,420-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.260 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,680-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.290-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.