தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.28) சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. நேற்று (பிப்.27) ஒரு சவரன் தங்கம் ரூ.119,200க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.2400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.121,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,200க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.300க்கும் ஒரு கிலோ ரூ.5000 உயர்ந்து, ரூ.300,000க்கு விற்பனையாகிறது.