ராஜஸ்தானில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில், உண்பதற்கு ஏதுவான 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட ‘ஸ்வர்ண பிரசாதம்' என்கிற இனிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது, ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விற்கப்படும் விலையுயர்ந்த இனிப்புகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. ஒரு துண்டு இனிப்பின் விலை ரூ.3,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களும் அதனை ஆர்வமாக வாங்கி வருகின்றனர்.