கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.. விவசாயிகளுக்கு அறிவிப்பு

57பார்த்தது
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.. விவசாயிகளுக்கு அறிவிப்பு
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் டிச., 29ஆம் தேதி முதல் ஜன., 28ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கோமாரி நோயால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், பால் உற்பத்தி குறைவது, சினைப் பிடிப்பு தடைபடுவது வழக்கமாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும், குறிப்பிட்ட நாளில் நடைபெறும் தடுப்பூசி முகாமைப் பயன்படுத்தி விவசாயிகள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி