HDFC வங்கி தனது MCLR வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் குறைத்துள்ளது. இதற்கு முன்பு 8.45 சதவிகிதம் முதல் 8.65 சதவிகிதமாக இருந்தது. தற்போது 8.35 முதல் 8.60 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 மாதம், 3 மாதம், 1 ஆண்டு, 3 ஆண்டுக்குள் நீங்கள் செலுத்த வேண்டிய தனிநபர் கடன், பிசினஸ், வீட்டுக்கடன் மீதான வட்டி, இஎம்ஐ சற்று குறையும். முன்னதாக எஸ்பிஐ வங்கியும் தனது MCLR வட்டி விகிதத்தை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.