EPFO தனது சந்தாதாரர்களுக்காக புதிய மொபைல் செயலியை உருவாக்கி வருகிறது. ஏப்ரலில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஆப் மூலம், PF தொகையை UPI வழியாக நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்றலாம். பாஸ்புக் பார்வை உள்ளிட்ட சேவைகளும் கிடைக்கும். தற்போது சோதனை கட்டத்தில் உள்ள செயலி, OTP தாமதம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என கூறப்படுகிறது.