வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 சட்டத்தின் விதிமுறைகள்படி வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் புதிய நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி இனி வீட்டின் உரிமையாளர் 2 மாத வாடகையை மட்டுமே முன்பணமாக கேட்க வேண்டும். அதேபோல் வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வணிக கட்டிடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.