தன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக டிடிஎஃப் வாசனின் காதலி ஷாலின் சோயா குறிப்பிட்டுள்ளார். அதுவேறெதுவுமில்லை, சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற கனவோடு இருந்த ஷாலின் சோயா அது தற்போது நனவாகி இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த பயணத்தில் எனக்கு பக்க பலமாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.