"நாளை நல்ல தகவல்".. ச‌சிகலா பரபரப்பு பேட்டி

13பார்த்தது
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சசிகலா தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (பிப்.23) அண்ணா, எம்ஜிஆர், ஜெயல‌லிதா ஆகியோரது நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செய்துள்ளார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், "நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். நல்ல தகவலை சொல்கிறேன்” என கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனால், அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளாரா? அல்லது தனிக்கட்சி தொடங்கவுள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி