காரைக்குடி மற்றும் மாமல்லபுரத்தில் அரசு பேருந்துகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு விபத்தை தடுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அதிக வேலை வாங்குவதே விபத்துகளுக்குக் காரணம் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அவர் மறுத்துள்ளார். மேலும், இந்த விபத்துகள் குறித்து விசாரித்து, விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.