தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்தும் தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி பாதுகாப்பாக வாகனங்களை இயக்க பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர்.