சிவகங்கையில் அரசு பஸ், சுற்றுலா வேன் மோதல்: 20 பேர் படுகாயம்

5370பார்த்தது
மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே இன்று மதியம் அரசுப் பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து திடீரெனச் சாலையின் மறுபுறம் திரும்பியபோது நடந்த இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி