அரசு பஸ்-கார் மோதி விபத்து.. இருவர் பலி

13904பார்த்தது
அரியலூர்: அரசு பேருந்தும் காரும் மோதி கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூரில் இருந்து பாலசுப்பிரமணியன் (46) மற்றும் அவரது சகோதரி விஜய லட்சுமி (55) காரில் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது சாத்தமங்கலம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், விஜயலட்சுமி மற்றும் கார் ஓட்டுநர் முரளி (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.