செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில், 5 பயணிகள் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டையில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு இன்று (அக்.16) அதிகாலை அரசுப் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது சாலை குறுகி இருந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர தடுப்புகளை இடித்தபடி, அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சுற்றுச்சுவரின்மீது மோதி விபத்துக்குள்ளானது. 50 பயணிகள் சென்ற நிலையில், 5 பயணிகள் படுகாயமடைந்தனர்.