கலெக்டர் உத்தரவை மீறி சென்ற அரசு பஸ் சிறைபிடிப்பு

27பார்த்தது
கலெக்டர் உத்தரவை மீறி சென்ற அரசு பஸ் சிறைபிடிப்பு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த இளம்பகவத் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில், அவரது உத்தரவை மீறி ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பேருந்து வராமல் நள்ளிரவில் புறக்கணித்து செல்ல முயன்ற அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரவை மீறி மீண்டும் பேருந்துகள் ஊருக்குள் வராமல் இயக்கப்பட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். புதிய மாவட்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.