விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே இதுவரை பேருந்து வசதியின்றி இருந்த அயன்ரெட்டியப்பட்டி கிராமத்திற்கு, முதன்முறையாக அரசு பேருந்து சேவை இன்று (செப்.14) தொடங்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த அமைச்சரான வன்னி அரசு, அயன்ரெட்டியப்பட்டியில் இருந்து விருதுநகர் வரை செல்லும் புதிய அரசு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக தங்கள் ஊருக்கு அரசு பேருந்து வந்ததை அடுத்து, ஊர் பொதுமக்களுடன் இணைந்து அமைச்சரும் உற்சாகமாக பேருந்தில் பயணம் செய்து மகிழ்ந்தார்.