கேரளாவில் இனி அரசு சார்பில் புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மதம் சார்ந்த பெயர்கள் வைக்கப்படாது என்று அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மாநிலத்தின் கல்வி சூழலில் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.