பீகார் மாநிலத்தில் அரசு வேலை பார்க்கும் இளைஞரை கடத்திய பெண் வீட்டார் திருமணம் நடத்திவைக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமஸ்திபூரில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு அவருக்கு போதைப் பொருள் கொடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து அவரை மணமேடைக்கு அழைத்துச் சென்று, போதை மயக்கத்தில் பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த போக்கை பலரும் கண்டித்து வருகின்றனர்.