சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 'நலம்AI' என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் மூலமாக புறநோயாளிகள் (OP) சீட்டு முன்பதிவு செய்யும் வசதியை சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இத்திட்டம் நெஞ்சக நோய் பிரிவிற்கான மருத்துவ சேவைகளுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் வீட்டிலிருந்தபடியே ஒரே ஒருமுறை பதிவு செய்துகொண்டு, எளிதான முறையில் மருத்துவ பரிசோதனைக்கான நேரத்தை இதன்மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.