பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டள்ளது. மே மாதத்திற்கு மட்டும் ரூ.10,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.12,500 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஊதியம் ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.15,000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் 2026-27ஆம் ஆண்டு தொடர் செலவினமாக ரூ.44.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.