“71 வயதில் அரசாங்க வேலை”.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி

15பார்த்தது
“71 வயதில் அரசாங்க வேலை”.. கமல்ஹாசன் நெகிழ்ச்சி
கேரளாவில் நடைபெற்ற ஹோர்டஸ் ஆர்ட் அண்ட் லிடரேச்சர் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலிடம், எம்பி ஆன தருணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “எம்பியாக நான் என்னுடைய முதல் கையெழுத்தை போடும்போது என்னுடைய பெற்றோர் தான் நினைவுக்கு வந்தனர். எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என எனது அம்மா விரும்பினார். தற்போது 71 வயதில் அது நடந்திருக்கிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி